தகிக்கும் வெயில்... பாதுகாப்பாக இருக்க மாணவர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோருக்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை வழங்கியுள்ள அறிவுரைகள் குறித்து பார்ப்போம்.
மாணவர்கள், பகல் 12:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, நேரடி வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
ஆசிரியர்கள் அந்த நேரத்தில், திறந்தவெளி வகுப்புகள், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளை வழங்கக் கூடாது
சதுரங்கம், கேரம் போன்ற உள்ளரங்க விளையாட்டுகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும்
காபி, கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் அதிக சர்க்கரை உள்ள பானங்களைத் தவிர்க்க வேண்டும்
பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணியர், முதியோர் மற்றும் இதய நோய் பாதிப்புள்ளோர், வெயிலில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
கோடை காலத்தில் தலைவலி, தலைசுற்றல், வாந்தி, தசைப்பிடிப்பு, அதிக இதயத்துடிப்பு மற்றும் மயக்கம் போன்றவை, வெப்ப பாதிப்பின் அறிகுறிகளாக வெளிப்படும்.
இதுபோன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் அல்லது 108 அவசர சிகிச்சை உதவியை நாட வேண்டும்
கோடையில் பரவக்கூடிய அம்மை நோய், பொன்னுக்கு வீங்கி, சின்னம்மை ஆகியவற்றின் அறிகுறிகள் தென்பட்டால், மற்றவர்களுக்கு பரவாத வகையில், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.