கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது எப்படி?
கொளுத்தும் வெயிலை சமாளிக்க அவ்வப்போது போதியளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க வைட்டமின் 'சி' உள்ள பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
அதேவேளையில், பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு கல் உப்பு கலந்த தண்ணீரில் கழுவிய பின் சாப்பிட வேண்டும்.
எலுமிச்சை, கருப்பட்டி சேர்த்து பானகம் தயார் செய்து பருகலாம்.
மோர், இளநீர், கம்பங்கூழ் உள்ளிட்டவை உடலில் குளிர்ச்சியை தக்க வைக்கும்.
நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் குளியல் எடுத்துக் கொண்டால் உடல் சூட்டை தணிக்கலாம்.