நெல்லிக்காயை உண்டால் இத்தனை பயன்களா!!

வயிற்று வலி மற்றும் வயிறு அழற்சியை குணமாக்கும் ஆற்றல் நெல்லிக்காய்க்கு உண்டு.

நெல்லி இலையை கைப்பிடியளவு நீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி கொப்பளித்தால், வாய்ப்புண் குணமாகும்.

தினம் ஒரு நெல்லிக்காயை சாறு பிழிந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

நெல்லிக்காயுடன், தாமரை இலையின் இதழ்கள் சேர்த்து அரைத்து, உடலில் அடிபட்டு வீங்கிய இடத்தில் பூசினால், வீக்கம் குறைந்து விடும்.

நெல்லிக்காயிலுள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலையும், ரத்த சோகையையும் குணப்படுத்தும்.

நெல்லிக்காயை காயவைத்து, பவுடராக்கி, தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி, வடிகட்டி தலையில் தேய்த்தால் முடி உதிராது. இளநரைக்கும் சிறந்த நிவாரணி.

வைட்டமின் சி, வைட்டமின் குறைபாடுகளால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

கருவுற்ற பெண்கள் நெல்லிக்காயை சாப்பிட்டு வர, அதிலுள்ள இரும்புச்சத்து கரு வளர்ச்சிக்கு உதவும்.

நெல்லிக்காயில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய, மூன்று சுவைகள் இருப்பதால், உடலுக்கு ஆரோக்கியம் தரும்.