யூரிக் அமில அளவை இயற்கையாக குறைக்கும் கோடைக்கால பழங்கள் சில

ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் யூரிக் அமில படிகங்களை கரைத்து, சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள கொய்யா, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

அதிக நீர்ச்சத்து மற்றும் இயற்கையான டையூரிடிக் பண்புகளுடன் உள்ள தர்பூசணி யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுவதுடன், உடலை குளிர்ச்சியாக வைக்கிறது.

வெப்ப மண்டல பழமான பப்பாளியிலுள்ள பப்பேன் என்ற நொதி செரிமானத்தை மேம்படுத்துகிறது; வீக்கம், யூரிக் அமில அளவை குறைக்கும்.

கோடைக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காய், யூரிக் அமிலம் உள்ளிட்ட நச்சுக்களை குறைக்கும்.

செர்ரி பழத்தில் நிறைந்துள்ள அந்தோசயினின் என்ற ஆக்ஸிஜனேற்றிகள் வீக்கம் மற்றும் அமில அளவை குறைக்கின்றன.