குளிர்கால உணவுகள்.... ஹெர்பல் கஷாயம் !
தேவையானப் பொருட்கள்: வெற்றிலை - ஐந்து, ஓமவல்லி இலைகள் - இரண்டு, துளசி இலைகள் - ஐந்து, தண்ணீர் - ஒரு கப், தேன் - தேவையானளவு.
வெற்றிலையின் காம்பு நுனி நீக்கி, பொடியாக நறுக்கவும்.
தண்ணீரில் வெற்றிலை, ஓமவல்லி இலைகள், துளசி இலைகளை சேர்த்து அடுப்பில் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
இதை நன்றாக வடிகட்டினால், ஹெர்பல் கஷாயம் இப்போது ரெடி.
செரிமானக் கோளாறு, சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம் தரும் இந்த கசாயம்.
குளிர்காலத்தில் அடிக்கடி இதை குடித்து வர சளி, இருமல் தொல்லையிலிருந்து தப்பலாம்.