நோய் எதிர்ப்பு திறன் அதிகமுள்ள வெற்றிலை கஷாயம்....

வெற்றிலையில் நீர்சத்து, புரோட்டீன், கொழுப்பு, மினரல், நார்சத்து, கால்சியம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், பொட்டாசியம் என, இன்னும் நிறைய இருக்கிறது.

அஜீரண கோளாறை சரி செய்ய வெற்றிலை போடுவது நம் வழக்கம். இதன் இலையில் கார்ப்பு தன்மை இருப்பதால், பல உடல் கோளாறுகளை சரி செய்யும். மருத்துவ குணமும் கொண்டது.

வெற்றிலையை நன்றாக கழுவி சுத்தப்படுத்தி, நீர் சேர்த்து அடுப்பில் கொதிக்க விட்டு மிளகு, கிராம்பு, சுக்கு பொடி சேர்க்கவும்.

தண்ணீர் பாதியாக சுண்டும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இந்த கஷாயத்தை குளிர வைத்த பிறகு வடிகட்டி குடிக்கவும். இதனால், பல நோய்கள் குணமாவதாக, ஆயுர்வேதம் கூறுகிறது.

வெற்றிலையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் குடிப்பது, மலச்சிக்கலை குறைக்கும்.

ஒரு வெற்றிலை, ஒரு கல் உப்பு சேர்த்து மென்று முழுங்கினால், வயிற்று உப்புசம் உடனடியாய் தீரும்.