ஆரோக்கியத்தை அள்ளிதரும் தேனும், பட்டையும்!

தேனிலும், பட்டையை இணைந்து எடுத்துக்கொண்டால் உடலில் ஏற்படும் அற்புத ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை காண்போம்.

முட்டி வலி உள்ள இடத்தில் ஒரு பகுதி தேனுக்கு இரண்டு பகுதி வெதுவெதுப்பான நீர் எடுத்து அதில் ஒரு சிறிய டீஸ்பூன் அளவு பட்டை பொடியை கலந்து பேஸ்ட்டாக்கி தேய்க்க நல்ல நிவாரணம் கிடைக்கும்.

குறிப்பாக ஆர்த்தரடிஸ் நோயாளிகள், தினமும் காலையில் ஒரு கப் சுடு தண்ணீரில், 2 ஸ்பூன் தேன், ஒரு சிறிய டீஸ்பூன் பட்டைப் பொடியை கலந்து தினமும் குடித்து வந்தால் போதும் வலிகள் குறையும்.

ஜலதோஷத்தால் அவதிப்படுகிறவர்கள், ஒரு டேபிள் ஸ்பூன் தேன், 1/4 டீஸ்பூன் பட்டை பவுடர் கலந்து மூன்று நாட்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சளி, இருமல், சைனஸ் குணமாகும்.

தேனுடன் பட்டை பவுடரை கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும். அது போல சரிசம அளவு இரண்டையும் கலந்து சாப்பிட்டு வந்தால் வாயு பிரச்னையும் தீரும்.

அதிகம் எடை போட்டவர்கள், தினசரி தேனையும் பட்டை பவுடரையும் கொதித்த தண்ணிரில் கலந்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

சருமப் பொலிவுக்கு 4 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் பட்டை பவுடர் மற்றும் 3 கப் சூடான நீருடன் கலந்து தேனீர் தயாரித்து குறைந்தது தினசரி மூன்று வேளை 1/4 கப்பாவது அருந்த வேண்டும்.