தாய்ப்பாலில் உள்ள நன்மைகள் என்னென்ன?

தாயின் பால் பிறந்த குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை முற்றிலும் பூர்த்தி செய்ய உதவும்.

மேலும் குழந்தையின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், பாதுகாப்பு கூறுகள் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும்.

இதில் வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போதுமான அளவு உள்ளன.

மேலும், தாய்ப்பாலில் உள்ள டி.எச்.ஏ., மற்றும் ஏ.ஏ. போன்ற ஒமேகா - 3 கொழுப்பு, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியம்.

குறிப்பாக, வைட்டமின் ஏ, சி, டி, ஈ மற்றும் கே குழந்தையின் பார்வை திறனுக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுகின்றன

மற்ற பால் குடித்த குழந்தைகளைவிட தாய்ப்பால் குடித்த குழந்தைகள் 8% வரை அதிக அறிவாற்றல் இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

தாய்ப்பாலில் உள்ள என்சைம்கள் இவை குழந்தையின் செரிமானத்திற்கு உதவுகின்றன.

இதில் உள்ள லாக்டோஸ் ஆற்றலை அளித்து குழந்தையை சுறுசுறுப்பாகஇருக்க செய்யும். மேலும் லாக்டோஃபெரின் என்ற புரதம் இரும்பு உறிஞ்சுதலுக்கு உதவும்.