பனங்கிழங்கை இப்படி சாப்பிட்டால் இவ்வளவு ஆரோக்கியம்...
100 கிராம் பனங்கிழங்கில் 87 கலோரிகளும், 77 கிராம் நீர்ச்சத்தும் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி, ஆன்டி ஆக்சிடெண்ட்கள், அமினோ அமிலங்கள், புரதம் என பல சத்துகள் உள்ளன.
பனங்கிழங்கை வேக வைத்து, சிறு சிறு துண்டாக நறுக்கி, காய வைத்து, அதனுடன், கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்கும்
பனங்கிழங்குடன், தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் பெறும்
பனங்கிழங்கு, வாயு தொல்லையுடையது. எனவே, இதை தவிர்க்க, பனங்கிழங்குடன், பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து, மாவாக்கி சாப்பிடலாம்.
இனிப்பு தேவைப்படுவோர், கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம்.
பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து, அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிடலாம்.
குறிப்பாக வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு உள்ளோர், பனங்கிழங்கு மாவை, உணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
பனங்கிழங்கில், பித்தம் அதிகமாகவே உள்ளது. எனவே, இதை சாப்பிட்ட பின், மிளகை கொஞ்சம் வாயில் போட்டு மென்றிட, உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஆரோக்கியம் உண்டாகும்.