பல பல நன்மைகள் கொண்ட செவ்வாழை!

செவ்வாழையில் வைட்டமின் சி, இரும்புச் சத்து, நார்ச்சத்து, பொட்டாஷியம் மற்றும் பீட்டா கரோட்டின் சத்துகள் உள்ளன.

நுரையீரல், கல்லீரல், இதயம், குடல் போன்ற முக்கிய உடலுறுப்புகளின் செயல்பாட்டிற்கு, செவ்வாழை உதவுகிறது.

நம்முடைய குடலில், நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை, 10 மடங்கு உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மலச்சிக்கலை போக்கக்கூடியது. உடல் எடை சீராக வைக்கவும் உதவுகிறது.

செவ்வாழையை சிறிதாக நறுக்கி, கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலே, கண்களிலுள்ள உஷ்ணம் நீங்கி விடும்.

தினமும், ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால், சருமம் ஆரோக்கியமாக இருக்கும். சொறி, சிரங்கு, தோலில் ஏற்படும் வெடிப்பு உள்ளிட்ட தோல் பிரச்னைகள் தீரும்.

செவ்வாழையில், கால்ஷியம் சத்துக்கள் அதிகமாக உள்ளதால், பற்களுக்கு மிகவும் வலு தருகிறது.

இதில் பொட்டாஷியம் நிறைய உள்ளதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கிறது.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும், இதய நோய்களை எளிதில் ஏற்படாமல் பாதுகாக்கும்.