நீரை காய்ச்சி குடிப்பதன் அவசியம் என்னென்ன?
தண்ணீரை நன்கு காய்ச்சி, குடிக்கிற சூட்டிற்கு வந்தபின் குடிப்பதால், வயிறு பொருமல், புளித்த ஏப்பம், வயிறு உப்புசம், இருமல், கண் நோய்கள் இவற்றிற்கு மிகவும் நல்லது.
வாத, தொண்டை நோய்கள் இருப்பவர்கள் குளிர்ந்த நீரை குடிக்க கூடாது. குடித்தால், பசி மந்தமாகும்; மலச்சிக்கல் ஏற்படும். இவர்கள் வெந்நீர் குடிப்பதால் பல பலன்கள் உண்டு.
அடிக்கடி விக்கல் வரும் பிரச்னை இருப்பவர்கள் கண்டிப்பாக பச்சைத் தண்ணீர் குடிக்கவே கூடாது. அதற்கு பதிலாக, வெதுவெதுப்பான நீரையே குடிக்க வேண்டும்.
கல்லீரல் சார்ந்த பிரச்னைகள், ரத்த சோகை உட்பட ரத்த கோளாறுகள், கை, கால் வீக்கம், சிறுநீரக பிரச்னைகளுக்கு இதுவே ஏற்றது.
இது தவிர, சர்க்கரை கோளாறு, உடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் திறன் காய்ச்சிய நீருக்கு உள்ளது. படபடப்பு, பதற்றம் இருக்கும் சமயங்களில், இப்படி குடிப்பதால் மனது சாந்தமாகும்.
ரத்தப் போக்கு இருந்தால், பித்தம், சிறுநீரக கோளாறால் காய்ச்சல், வாந்தி, தலை சுற்றல் வரும் போதும் இது ஏற்றது.