உணவே மருந்து... முருங்கையின் ஆரோக்கிய நன்மைகள் !
முருங்கை கீரையில் வைட்டமின் பி, இரும்பு, பீட்டா கரோட்டின், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
முருங்கையில் உள்ள அன்டிஅக்ஸிடன்ட் கள் செல் சிதைவை எதிர்த்துப் போராட உதவுகிறது, நாள்பட்ட நோய்களின் அபாயத்தைகயும் குறைக்கிறது.
இதிலுள்ள ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி முருங்கையின் பண்புகள் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்திற்கும் கை கொடுக்கிறது.
சாம்பார், கீரை என ஏதாவது ஒரு வகையில் முருங்கையை சேர்க்க மலச்சிக்கலுக்கு நிவாரணமாக உள்ளது.
முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கக்கூடும். கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் இதிலுள்ளது.
மூட்டுவலி மற்றும் ஆஸ்துமா போன்ற பாதிப்பை குறைக்கவும் முருங்கை உதவுகிறது.
ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முருங்கை உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.