முட்டையை அளவுடன் சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது!!

காலையில் முட்டை சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள உயர்தர புரதமும், கொழுப்பும் உடலின் சக்தியை நாள் முழுவதும் தக்க வைக்கிறது.

முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை. அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்திற்கு எந்தவிதமான கெடுதலையும் செய்யாது என்கிறனர் உணவியல் நிபுணர்கள்.

முட்டையில் கெட்ட கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளிசரைடு அளவும், இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, கெட்ட கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது.

இத்துடன் இதயத்திற்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன என்கின்றனர்.

நீரழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைப்படி வாரம் ஓரிரு முட்டை மட்டும் சாப்பிடலாம் என கூறப்படுகிறது.

மற்றவர்கள் முட்டையைக் கண்டு பீதி கொள்ளாமல், சிறந்த சத்துணவாக முட்டையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.