மூட்டு வலிக்கு சமையல் அறையில் இருக்கு மருந்து!

மூட்டு வலி வருவதற்கு காரணம், உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதே. வலியை குணமாக்க, அன்றாட உணவு முறைகளே போதுமானது.

உணவில் உள்ள கரோட்டீன் மூலம், வலியை நிவாரணம் செய்ய முடியும். இந்த கரோட்டீன், வெங்காயத்தில் அதிகமாக உள்ளது.

மஞ்சள் உடலில் உள்ள காயங்களை குணப்படுத்தி, மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைத்துவிடும்.

இஞ்சியிலும் மஞ்சளைப் போன்ற, மருத்துவக் குணம் உள்ளது. தினமும் இஞ்சியை சேர்த்துக் கொள்வது சிறந்த நன்மையைத் தரும்.

பூசணிக்காயில் கரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. இதனை சாப்பிடுவதால், மூட்டுகளில் ஏற்படும் காயங்கள், வீக்கங்கள் மற்றும் வலிகள் நாளடைவில் குணமாகும்.

மீனில் ஒமேகா 3 பேட்டிஆசிட் அதிகம் உள்ளதால், அவை உடலின் மூட்டுகளில் உள்ள காயங்களை குணப்படுத்தும்.

பாலில் அதிகமான அளவில் ப்யூரின் இருப்பதால், அவை யூரிக் ஆசிட்டின் அளவை அதிகரிக்கும். எனவே இதனை தவிர்க்க வேண்டும்.

கத்திரிக்காய், சிவப்பு குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை, குணமாகிக் கொண்டிருக்கும் மூட்டு வலியையும் குணமாகாமல் தடுக்கும். எனவே இந்த காய்கறிகளை தவிர்க்கவும்.