உடலுக்கு நீர்ச்சத்தின் அவசியமென்ன?
கோடைக்காலம் துவங்கினாலே நீர்ச்சத்து குறைபாடு வருவது பொதுவானது.
இதனால், அதிக வியர்வை, தலைவலி, தலைசுற்றல், மயக்கம், அதீத தாகம், வாய் உலர்ந்து போவது போன்ற அறிகுறிகள் அவ்வப்போது ஏற்படலாம்.
இதற்கேற்ப நீராகாரம் எடுக்காவிட்டால், உடலில் நீர்ச்சத்து குறைந்து, உள்ளுறுப்புகளின் செயல்பாடு குறைய அதிக வாய்ப்புகள் உள்ளன.
உஷ்ணம் காரணமாக கழிவுநீர் வியர்வையாக வெளியேறுவதால், கோடையில் குறைந்த அளவிலேயே சிறுநீர் வெளியேறும்; வழக்கத்தை விட அடர்த்தியாக இருக்கும்.
நீர்ச்சத்து குறைபாடு நீண்ட நாட்களுக்கு இருந்தால் சிறுநீரகங்களில் பாதிப்பு வரலாம்.
வயதானவர்கள், குழந்தைகள், இணை நோய்கள், நீண்ட நாள் உடல் கோளாறுகளுக்காக தொடர்ந்து மருந்து எடுப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
நீர்ச்சத்து குறைபாடால், ரத்தம் உறையும்போது, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் அடைபட்டு பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
நம் உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளை கவனித்து, அவரவருக்கு எந்தளவு நீராகாரம் தேவையோ அதை எடுத்துக் கொள்ளலாம்.
உட்கார்ந்து எழுந்திருக்கும் போது தலை சுற்றுவது, தலைவலி, எல்லா நேரமும் அலுப்பாகவே இருப்பது, இதெல்லாம் நீர்ச்சத்து குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகள்.