நெஞ்செரிச்சல், செரிமானம் பிரச்னைகளுக்கு டிப்ஸ்...

தற்போதைய உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக உடல் பருமன் ஏற்பட்டு அஜீரண கோளாறு காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

வயிற்றில் புண் ஏற்பட்டு உணவுக்குழாயில் பிரச்னை காரணமாக செரிமானக் கோளாறு ஏற்படுகிறது.

பாஸ்ட் புட் உணவுகள், எண்ணெய், கார உணவுகளால் இந்த பிரச்னைகள் ஏற்படுகிறது.இதற்கு இயற்கை வகை உணவை உட்கொள்ள வேண்டும்.

தினமும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும்.

பிரச்னை உள்ளவர்கள் இரவு உணவை துாங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டும்.

இரவு துாங்கும் போது தலைக்கு உயரம் தரும் வகையில் தலையணை வைத்து படுக்க வேண்டும்.

வயிற்றுக்கும், உணவுக் குழாய்க்கும் இடையே உள்ள வால்வு தளர்வாக இருந்தால் இது போன்ற செரிமானக்கோளாறு, நெஞ்செரிச்சல் ஏற்படும்.