சென்னையில் பரவும் இன்புளுயன்சா வைரஸ் தொற்றுகள்... எப்படி பாதுகாக்கலாம்!

இன்புளுயன்சா வைரஸ் தொற்றுகள் குளிர் மற்றும் மழை காலங்களில் அதிகமாக பரவக் கூடியது. தற்போது சென்னையில் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிக அளவில் பரவுகிறது.

இன்புளுயன்சா காய்ச்சல் என்பது பரவக்கூடிய வைரஸ் காய்ச்சல். சளி, தொண்டை வலி, இருமல், தலைவலி, உடம்பு வலி போன்ற அறிகுறிகளுடன் வைரஸ் காய்ச்சல் வரலாம்.

இந்தக் காய்ச்சல் பாதிப்பு சில நேரங்களில் தெரியாமல் கூட இருக்கலாம். லேசான காய்ச்சல் தொடங்கி தீவிர காய்ச்சல் பாதிப்பாக மாறக்கூடும்.

பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது இந்தக் காய்ச்சல் பரவுகிறது. மே மாதத்தில் இருக்கும் அதிகமான வெப்ப நிலை, இந்த செப்டம்பர் மாதத்தில் உள்ளது. ஆனாலும், இன்புளுயன்சா வைரஸ் தொற்றுகள் பரவி வருகிறது.

லேசான அறிகுறி உள்ளவர்கள் தனிமையில் இருந்தால் போதுமானது. விட்டமின், பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் குணமாகும்.

ஆனால் நோய் தீவிரமானால் சுயமாக மருந்துகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. மருத்துவரின் சோதனையில்தான் உங்களுக்கு என்ன மாதிரியான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து சிகிச்சை பெறவும்.

தொற்றுக் காலத்தில் மாஸ்க் அணிய வேண்டும். வெளியே செல்லும்போது கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். அதிகம் கூட்டம் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்லவதை தவிர்க்கலாம்.