ஹெல்த்தியான கொண்டைக்கடலை மசாலா ப்ரை

தேவையானப் பொருட்கள்: வெள்ளைக் கொண்டைக்கடலை - 100 கிராம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன், மிளகாய் துாள், அரிசி மாவு, கரம் மசாலாத்துாள் - தலா 1 டேபிள் ஸ்பூன்.

இரண்டு மணி நேரம் ஊற வைத்த கொண்டைக் கடலையை, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக விட்டு, பின் தண்ணீரை வடிக்கவும்.

அகலமான பாத்திரத்தில், வேக வைத்த கடலையுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் துாள், கரம் மசாலாத்துாள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், கொஞ்சம் கொஞ்சமாக கடலையை போட்டு பொரித்தெடுக்கவும்.

இப்போது, புரதம், இரும்பு மற்றும் நார்சத்து நிறைந்த கொண்டைக்கடலை மசால் ப்ரை ரெடி.

இதை குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி உண்பர்.