ஹெல்த்தியான மக்கானா கிரேவி ரெசிபி
தேவையானப் பொருட்கள்: தாமரை விதைகள் - 50 கிராம், பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 2, சீரகம், சோம்பு தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்.
முந்திரி பருப்பு - 10, ப.மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 5, ஏலக்காய் - 2, பட்டை - 1, கிராம்பு - 3, உப்பு, வெண்ணெய், பிரஷ் கிரீம் - தேவையானளவு, கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்.
கடாயில் சிறிது வெண்ணெய் விட்டு சூடானவுடன் தாமரை விதைகளை நிறம் மாறும் வரை வதக்கி தனியே வைக்கவும்.
பின் கடாயில் மீண்டும் வெண்ணெய் சேர்த்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பை வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் (பாதியளவு) இஞ்சி, பூண்டு, ப.மிளகாய், மு.பருப்பு சேர்க்கவும்.
பொடியாக நறுக்கிய தக்காளி பழங்களை சேர்த்து நன்கு மசிய விடவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கி ஆறியவுடன், மிக்ஸி ஜாரில் நைசாக அரைக்கவும்.
கடாயில் சிறிது வெண்ணெய் விட்டு மீதமுள்ள வெங்காயம், கரம் மசாலா மற்றும் அரைத்த கலவையை வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பாதியாக வற்றியவுடன் மக்கானாவை சேர்க்கவும்.
நன்றாக வெந்து கிரேவி பதத்துக்கு வந்தவுடன் பிரஷ் கிரீம் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவினால், சத்தான மற்றும் சுவையான மக்கானா கிரேவி ரெடி.
சப்பாத்தி மற்றும் சூடான சாதத்துடன் தொட்டு சாப்பிட சுவை அள்ளும் இந்த மக்கானா அல்லது தாமரை விதை கிரேவி.
தாமரை விதைகளில் உள்ள மெக்னீசியம் ரத்த ஓட்டத்தை சீர் செய்து இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. பொட்டாசியம், சோடியம் உள்ளதால், ரத்த ரத்த அழத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.