ஹெல்த்தியான கம்பு பணியாரம்
தேவையானப் பொருட்கள்: முளை கட்டிய கம்பு மாவு - 1 கப், அரிசி மாவு மற்றும் துண்டாக்கிய தேங்காய் - தலா 0.25 கப்.
பொடித்த வெல்லம் - 1 கப், உப்பு, ஏலக்காய் துாள், முந்திரி, தண்ணீர், நெய் - தேவையான அளவு.
முளை கட்டிய கம்பு தானிய மாவு, அரிசி மாவு, பொடித்த வெல்லம், சிறு துண்டுகளாக்கிய தேங்காய்யை தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கலக்கவும்.
இதில், ஏலக்காய் துாள், பொடித்த முந்திரி மற்றும் சிறிது உப்பையும் சேர்க்கவும்.
அடுப்பில் பணியார கல்லை வைத்து சூடானதும், குழிகளில் நெய் தடவி மாவை ஊற்றவும்.
வெந்ததும், மறுபுறம் திருப்பி போட்டு, பொன்னிறமானவுடன் எடுக்கவும்.
இப்போது, ஆரோக்கியமான மற்றும் சுவையான 'கம்பு பணியாரம்' ரெடி.