டேஸ்டியான பால் போலி தயாரிப்பது இப்படித்தான்!

தேவையானப் பொருட்கள்: மைதா - 1 கப், ரவை, சர்க்கரை - தலா 0.50 கப், பால் - 0.50 லிட்டர், உப்பு - 1 சிட்டிகை.

குங்குமப்பூ - 10 - 15 இழைகள், பாதாம், முந்திரி பருப்பு - தலா 0.25 கப், ஏலக்காய் தூள் - 0.50 டீஸ்பூன்.

மைதா, ரவை, பாதி சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மென்மையான மாவாகப் பிசைந்து, 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை சுண்டக் காய்ச்சவும். பின் குங்குமப்பூ இழைகளையும் சிறிது சர்க்கரையையும் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் மிதமான தணலில் கொதிக்க விடவும்.

பின், ஏலக்காய் தூளைத் தூவி, அது நன்றாகக் கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

பாதாம், முந்திரி மற்றும் மீதி சர்க்கரையைச் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்து உலர் பழங்களின் கலவையைத் தயாரித்து தனியே வைக்கவும்.

இப்போது, மாவை சிறு சிறு உருண்டைகளை உருட்டி, சின்னச் சின்ன பூரிகளாகச் செய்து பொரித்தெடுத்து, சுவையூட்டப்பட்ட பாலில் தோய்க்கவும்.

தொடர்ந்து, பூரிகளை வைத்து, அதன் மேல் சுவையூட்டப்பட்ட பாலை ஊற்றி, உலர் பழங்களின் கலவையால் அலங்கரித்தால், சாபிட டேஸ்டியான பால் போலி ரெடி.