பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கு நன்னாரி நல்ல தேர்வு!!

நன்னாரி, கொடியாக தரையில் படரும் தாவரம். கிருஷ்ணவல்லி, அங்கார மூலி, அனாதமூலா, நறுக்கி மூலம், பாதாள மூலி, நறுநீண்டி, சுகந்த மூலி, காணாறுசாரி என, வேறு பெயர்களும் இதற்கு உள்ளது.

நன்னாரி இலையை நெய்யில் வதக்கி, மிளகும், இந்துப்பு மற்றும் சிறு புளி சேர்த்து துவையல் செய்து சாப்பிட, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னை சரியாகிறது.

நன்னாரி, ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது; 'ஆரத்ரைட்டிஸ்' மூட்டு வலிகளையும் குறைக்கிறது.

நன்னாரி வேர் பொடியை, தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. செரிமான பிரச்னைகள் சரியாகிறது.

நன்னாரியில், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் ஆன்டி டியூமர் தன்மை உள்ளதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

பச்சை நன்னாரி வேரை, 20 கிராம் தட்டி, 200 மி.லி., நீரில், ஒருநாள் ஊறவைத்து வடி கட்டி, 100 மி.லி.,யை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பித்த நோய், நீரிழிவு உள்ளிட்ட பிரச்னை குறையும்.

நன்னாரி வேரை பொடியாக்கி, சோற்றுக்கற்றாழையுடன் கலந்து சாப்பிட விஷக்கடிகள் குணமாகிறது.

நன்னாரி, தனியா, சோம்பு இவை அனைத்தும் சம அளவு எடுத்து பொடி செய்து தினமும் சாப்பிட்டு வர, உடல் பருமன் குறையும்.

நெல்லிக்கனி சாற்றில் நன்னாரி வேரை ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து சாப்பிட, இதயம் வலுவடையும்.