ஹெல்த்தியான பூசணிக்காய் சப்பாத்தி ரெசிபி
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி துருவிய அல்லது சிறிது சிறிதாக நறுக்கிய 2 கப் மஞ்சள் பூசணிக்காயை 5 நிமிடம் வரை வதக்கி, சூடு ஆறியவுடன் கைகளால் பிசையவும்.
பவுலில் 3 கப் கோதுமை மாவு, பூசணிக்காய், சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி இலை, தேவையானளவு உப்பு, காரத்துக்கு சிறிதளவு மிளகாய் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து மாவு பதத்தில் பிசையவும்.
பிசைந்த மாவை அரை மணி நேரத்துக்கு ஊற வைக்கவும்.
பின், தோசைக்கல்லில் வழக்கமான முறையில் மாவை தேய்த்து, இருபக்கமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுத்தால் சுவையான, ஆரோக்கியமான பூசணிக்காய் சப்பாத்தி ரெடி.
ஒரு கப் (250 கிராம்) மஞ்சள் பூசணியில் 50 கலோரிகள் அடங்கியுள்ளதால், எடை இழப்புக்கு இது உகந்த உணவாகும்.
இதிலுள்ள நார்ச்சத்து, நீண்டநேரம் பசியை கட்டுப்படுத்த உதவுவதால், உடல் எடையை ஆரோக்கியமாக கட்டுக்குள் வைக்கலாம்.
கலோரி, கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளதால் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உகந்த சாய்ஸாகும். இதிலுள்ள பீனாலிக் பண்புகள் நீரிழிவு பாதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.