பாரம்பரிய சுவையில் ஹெல்த்தியான மரவள்ளிக்கிழங்கு மிட்டாய்

தேவையானப் பொருட்கள்: மரவள்ளிக்கிழங்கு - 1 (பெரியது), நாட்டு சர்க்கரை - தேவையானளவு, தேங்காய் துருவல் - 0.25 கப், ஏலக்காய் துாள் - 0.50 டீஸ்பூன்.

மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கி, நன்றாக கழுவவும்.

அதை கேரட் துருவுவது போல, நைசாக துருவியெடுத்து, வெள்ளை துணியில் வைத்து, கிழங்கிலுள்ள சாறு போகும்படி பிழிந்து கொள்ளவும்.

பின், சக்கை போன்ற நிலையிலுள்ள கிழங்கை ஒரு பவுலில் போட்டு, துருவிய தேங்காய், நாட்டு சர்க்கரை, ஏலக்காய் துாள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும்.

இதை கைப்பிடியளவு எடுத்து வாழை இலையில் வைத்து சுற்றிக்கொண்டு, இட்லி பாதிரத்தில் வைத்து, 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.

பின், அடுப்பை அணைத்துவிட்டு இலையை பிரித்தெடுத்தால் அவ்வளவு தான், மரவள்ளிக்கிழங்கு மிட்டாய் ரெடி.

பாரம்பரிய சுவையில், ஆரோக்கியமாக இருப்பதால் குழந்தைகளுக்கு உகந்த ஸ்நாக்ஸ் இது. அவர்களும், ஆர்வமுடன் விரும்பிச் சாப்பிடுவர்.