முட்டைக்கு மாற்று இந்த வெஜ் பனீர் புர்ஜி
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன், சீரகம் போடவும்.
அது வெடித்ததும் சிறிதாக நறுக்கிய வெங்காயம், மிளகு, இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகாய் துாள், மஞ்சள் துாள், கரம் மசாலா, தேவையான உப்பு போட்டு நன்றாக கிளறவும்.
மிதமான தணலில் மசாலாவை வதக்கி, பொடியாக நறுக்கி வைத்துள்ள பனீரை போடவும்.
இது முழுமையாக மென்மையாகும் வரை, விடாமல் கிளறிவிட்டு, ஓரிரு நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.
அதில் கஸ்துாரி மேத்தி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவினால், இப்போது பனீர் புர்ஜி ரெடி.
சப்பாத்தி, பிரட் டோஸ்டுக்கு சைடு டஷ் ஆக சாப்பிடலாம்.
முட்டை சாப்பிட விரும்பாதவர்களுக்கு இது மாற்றான ஒன்றாகும்.