ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முருங்கை கீரை
முருங்கை கீரையில், இரும்பு, சுண்ணாம்பு சத்துகள் அதிகமுள்ளன.
இதை வேக வைத்து சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். வெப்பத்தால் ஏற்படும் மலச்சிக்கல் நீங்கும்.
முருங்கை கீரை காம்புகளை நீக்கி, மிளகு ரசம் தயாரித்து உணவுடன் உண்டு வந்தால், கை, கால், உடல் வலி நீங்கும்.
நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை தீரும்.
கூந்தல் நீண்டு வளரும்; நரை குறையும். சருமப்பிரச்னைகள் நீங்கும்.
பெண்களுக்கு கர்ப்பபை குறைபாடுகளை போக்கி, கருத்தரிப்பை ஊக்குவிக்கும். தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும்.
ஆஸ்துமா, மார்புச்சளி, சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கைக்கீரை சூப் நிவாரணம் தரும்.