அதிகரிக்கும் இதய நோய் பாதிப்பு... ஆய்வில் தகவல்

தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனம், 2024ம் ஆண்டுக்கான இந்திய சுகாதார அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் உட்பட சுவாசம் தொடர்பான பிரச்னைகள் தற்போது அதிகமுள்ளன. இந்த வயதினருக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளில், இது 11 சதவீதமாக உள்ளது.

புற்றுநோய் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்காக மருத்துவமனைகளில் சேருவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக புற்றுநோய் பாதிப்புக்காக, 31 - 40 மற்றும் 41 - 50 வயதினர் சிகிச்சைக்கு சேர்க்கப்படுவது, 2.8 மடங்கு அதிகரித்துள்ளது.

அதுபோல, இதய நோய் பாதிப்புக்காக மருத்துவமனையில் சேருவோர் எண்ணிக்கை, 31 - 40 மற்றும் 41 - 50 வயது பிரிவினரில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

பிரசவம் தொடர்பான மருத்துவச் செலவு கோரல்களை பார்க்கும்போது, 69 சதவீதம் அறுவை சிகிச்சை வாயிலாகவே நடக்கிறது. 31 சதவீதம் தான் சுகப்பிரசவமாக உள்ளது.

மருத்துவச் செலவு உயர்ந்து வருவது, நோய் பாதிப்பு அதிகரித்து வருவது ஆகியவை, தனிநபர் மருத்துவ காப்பீட்டின் தேவைக்கான முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என கூறப்பட்டுள்ளது.