யாரெல்லாம் அடிக்கடி பல் தேய்க்க கூடாது?

பல் சுகாதாரத்தை பாதுகாக்க, காலையில் பல் தேய்ப்பது போன்று, இரவில் படுக்கச் செல்வதற்கு முன் பல் துலக்க பழக வேண்டும் என்பது நல்ல விஷயம்தான்.

இதை அனைவரும் பின்பற்றலாமா என்றால் கூடாது என டாக்டர்கள் கூறுகின்றனர்.

பல் வலி, புண், ஈறுகளில் ரத்தக் கசிவு, தொண்டை பிரச்னைகள், டான்சில்ஸ் கோளாறு உள்ளவர்கள், அடினாய்டு, காதில் பிரச்னை உள்ளவர்கள், தலைவலி இருப்பவர்கள் தவிர்க்கலாம்.

ஈறு தொடர்பான பிரச்னைகள் இருப்பவர்கள், பற்பசை, பிரஷ் வைத்து அழுத்தம் கொடுத்து பல் துலக்குவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் அதிக தாகம் இருப்பது, ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள், சத்து குறைபாடு , பல் கூச்சம் அதிகம் உள்ள இடத்தில் உள்ளிட்ட காரணங்களால் புண் இருப்பது போன்ற பல் இருந்தால் தவிர்க்கலாம்.

இவர்கள் வழக்கமான பற்பசைக்கு பதிலாக, 'தசனகந்தி, தந்ததாவனம், போன்ற ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்யலாம்.

சூரணத்தை சிறிதளவு எடுத்துதேன் கலந்து, பற்களின் மேல்தடவி, அழுத்தம் இல்லாமல் தடவி, நீரில் கொப்புளிக்கலாம். இது போன்று காலை, இரவு இரு வேளையும் இரு முறை செய்யலாம்.

ஆயுர்வேத மருத்துவர்கள் சிபாரிசு செய்யும் அரிமேதாதி தைலம் நல்ல மருந்து. அனைவரும் இதை பயன்படுத்தலாம்.

காரணம், பல், ஈறுகளை வலிமைப்படுத்துவதோடு, நரம்பு மண்டலத்திற்கும் நல்லது. வாய் பகுதியில் உள்ள நரம்பை வலிமையாக்கும். புண் இருந்தால் விரைவில் ஆற்றும்.