ஹெல்த்தியான தானிய தோசை !
தேவையானப் பொருட்கள்: ராகி, கம்பு, கோதுமை, வரகு, கறுப்பு உளுந்து - தலா 100 கிராம்.
கொள்ளு, கருப்பு கொண்டைக்கடலை - தலா 50 கிராம், வெந்தயம், எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
கருப்பு கொண்டைக்கடலை, ராகி, கம்பு, கோதுமை, வரகு, கொள்ளு, உளுந்து, வெந்தயத்தை தண்ணீரில் நன்கு ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு அரைக்கவும்.
உப்பு சேர்த்து மூன்று மணி நேரம் புளிக்க விடவும்.
தோசைக்கல் சூடானவுடன் சிறிது எண்ணெய் தடவி, மாவை ஊற்றி தோசையாக வார்க்கவும்.
இப்போது ஆரோக்கியமான மற்றும் சுவையான தானிய தோசை ரெடி.
தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவை அள்ளும்; காலை உணவுக்கு ஏற்றது.