ஹெல்த்தியான பச்சைப்பயறு சப்பாத்தி
தேவையானப் பொருட்கள்: பச்சைப்பயிறு - 2 கப், மிளகாய் - 2, சீரகம் - 2 டீஸ்பூன், கோதுமை மாவு - 2 கப், உப்பு மற்றும் தண்ணீர் - தேவைக்கேற்ப.
பச்சைப் பயறை, தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரத்திற்கு நன்கு ஊற வைக்கவும்.
ஊற வைத்த பச்சைப்பயறு, 2 மிளகாய் மற்றும் 2 டீஸ்பூன் சீரகம் போன்றவற்றை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து, ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன், அரைத்த பச்சைப் பயறு கலவையை ஊற்றி, தேவையானளவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
சிறிய சிறிய உருண்டையாக்கி சப்பாத்தி கட்டையில் மிருதுவாக தேய்த்தெடுக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானவுடன், மாவை இருபக்கமும் நன்றாக வேக விட்டு சுட்டெடுத்தால் போதும்.
இப்போது, சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பச்சைப் பயறு சப்பாத்தி ரெடி.