காலை பிரேக் பாஸ்ட்டுக்கு ஹெல்த்தியான ராகி ஸ்மூத்தி

கால் கப் தண்ணீரில் 1 1/2 டே.ஸ்பூன் ராகி மாவை கட்டிகள் இல்லாதவாறு நன்றாகக் கலக்கவும். முளைக்கட்டிய ராகி மாவு என்றால் சத்துக்கள் இன்னும் கூடுதலாக இருக்கக்கூடும்.

அடுப்பில் கடாயை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி ராகி கலவை, 1 பட்டை ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.

அடுப்பை குறைவான தணலில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். ஒரு சில நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து ராகி கலவையை ஆற விடவும்.

ஒரு மிக்சி ஜார் அல்லது பிளெண்டரில் ராகி கலவையுடன், முதல் நாள் இரவு ஊற வைத்து தோல் நீக்கிய 8 பாதாம், நறுக்கிய 1 ஆப்பிள்...

ஆளி விதைகள், சியா விதைகள் தலா 1 டே.ஸ்பூன் , 2 பேரீச்சம்பழம், 1/4 கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இப்போது சுவையான, ஹெல்த்தியான ராகி ஸ்மூத்தி ரெடி.