வெயிலால் வருகிறது ஹீட் ஸ்ட்ரோக்..வெளியில் அலைவதை தவிர்க்கலாமே!
வெயில் பலருக்கு உடல் வெப்பத்தை அதிகரித்து மாரடைப்பு ஏற்படக்கூடிய சாத்தியகூறு இருப்பதாக மருத்துவத்துறையினர் கருதுகின்றனர்.
உடல் வெப்பநிலை அதிகரித்து வியர்வை வெளியேறுவதை தடுப்பதால் 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.
ஹீட் ஸ்ட்ரோக் (வெப்ப வாதம்) என்பது உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த முடியாமல், 40 டிகிரிக்கும் மேல் உடல் வெப்பம் உயரும் ஒரு உயிருக்கு ஆபத்தான அவசர நிலையாகும்.
உடல் வெப்பநிலை அதிகரிப்பதை தடுப்பதற்கு நமக்கு நாமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல யுக்திகளை கையாள வேண்டுமென மருத்துவத்துறை எச்சரித்து உள்ளது.
மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை தேவையின்றி வெயிலில் அலைய வேண்டாம்.
கட்டாயமாக வெயிலில் செல்ல வேண்டி இருப்பவர்கள் லேசான பருத்தி ஆடை அணிய வேண்டும். தினமும் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். உடல் வெப்பநிலை உயர்வு அவர்களை அதிகமாக பாதிக்கும் .
ஹீட் ஸ்ட்ரோக்கை தடுக்க நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி , வெள்ளரி மற்றும் பழச்சாறுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.