ரத்த அழுத்தம் வர காரணங்கள் சில...

பொதுவாக ரத்த அழுத்தம் 90/60mmHg - 120/80mmHg அளவுக்குள் இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

இந்த அளவுக்குக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ ரத்தம் இதய நாளங்களில் அழுத்தப்பட்டால் இது பிரச்னையை உண்டாக்கும்.

இதய ரத்த நாளங்கள் வயதாக ஆக வலுவிழந்து இறுகத் துவங்கும். காலை தூங்கி எழுந்ததும் வயோதிகர்கள் சிலருக்கு ரத்த அழுத்தும் அதிகரிக்கும்.

மேலும் இதற்கு பல காரணங்கள் உள்ளன. மன அழுத்தம் இதற்கு ஓர் முக்கியக் காரணியாக உள்ளது.

இதுதவிர புகை, மதுப்பழக்கம், அதீத எண்ணெய் மற்றும் கொழுப்பு உணவுகளைச் சாப்பிடுவது உள்ளிட்டவை ரத்த அழுத்தம் அதிகரிக்கக் காரணியாக இருக்க வாய்ப்புள்ளது.

நாள்பட்ட நீரிழிவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு ரத்த அழுத்தம் ஏற்படலாம்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

மேலும் சில இதய நோய்களுக்கு நாள்பட்ட சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் அல்லது மருந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்.

ரத்த அழுத்தத்தை சீராக்க உணவுக் கட்டுப்பாடு அவசியம். அறுபது வயதுக்கு மேல் மசாலா, கொழுப்பு, எண்ணெய் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.