உபயோகமுள்ள வீட்டுக்குறிப்புகள் சில!

அரிசி களைந்த நீரில், எவர்சில்வர் பாத்திரங்களை சிறிது நேரம் ஊறவைத்து, பின்னர் தண்ணீரில் கழுவினால், புதிது போல் மின்னும்

குக்கர் பாத்திரத்தை வேக வைப்பதற்கு தவிர, எண்ணெய் விட்டு வதக்குவதற்கோ, கிளறுவதற்கோ பயன்படுத்தக் கூடாது. அதன் பயன்பாடு குறைந்துவிடும்.

எண்ணெய், நெய், ஊறுகாய் போன்றவை வைக்கும் இடத்தில், பிளாஸ்டிக் பேப்பர் வைத்துவிட்டால் சுத்தப்படுத்துவது மிகவும் எளிது.

வெங்காய தோல் அல்லது எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி சிங்க் பகுதிகளை இரவில் நன்றாக தேய்த்து விட்டாலும் கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது.

கரப்பான் பூச்சி நடமாடும் இடத்தில் கிராம்பை வைக்கவும். மேலும் கிராம்பு எண்ணெயை சிறிது தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யலாம்.

பட்டுப்புடவைகள் கிழியாமல் இருக்க அதன் இடையெ ஒரு பேப்பரில் ஒரு ஸ்பூன் அரிசி மற்றும் 1/4 ஸ்பூன் ஜவ்வாது பொடி இவற்றை ஒன்றாக கலந்து பேப்பரை மடித்து வைக்க வேண்டும்.