விவாதம் செய்யும் உடன் பிறப்புக்களை சமாளிக்கும் கலை இதோ...
திரும்பத் திரும்ப வாதிடும் போது என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் கோபத்தில் கத்துவோம். எனவே அதை தவிர்க்கவும்.
பிரச்னை எவ்வளவு சீரியஸாக சென்றாலும், மற்ற குடும்ப உறுப்பினர்களை விவாதத்திற்குள் கொண்டு வர வேண்டாம். குழப்பமே நிலவும்.
உங்கள் உடன்பிறந்தவர்கள் என்ன நினைக்கிறார், எப்படி உணர்கிறார் என்பதை அறிய நேரம் ஒதுக்குங்கள்.
கோபமாக அவர்களுக்கு தொடர்ந்து அழைப்பு விடுப்பது, வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
பிரச்னை தீர்க்க முடியாத நிலையில் இருந்தால், குடும்ப தெரபிஸ்ட்களை நாடலாம்.
சகோதரர் அல்லது சகோதரியுடனான சண்டை தீர்க்க முடியாமல் இருக்கிறது என்றால், அது நமது மற்ற உறவுகளையும் பாதிக்கும்.