உங்க குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க இதோ 3 டிரிக்ஸ் !
குழந்தைகளை நன்றாக ஓடியாடி விளையாட அனுமதிக்க வேண்டும்.
குறிப்பாக ஃபுட்பால், பேஸ்கெட் பால் போன்றவற்றை விளையாடும் போது தசைகளில் இருந்து மூளைக்கு சிக்னல் செல்லக்கூடும். அப்போது வளர்ச்சி ஹார்மோன்கள் வெளிப்படும்.
இந்த வளர்ச்சி ஹார்மோன்கள் தான் உயரத்தை அதிகரிக்கக்கூடிய முக்கிய காரணமாக உள்ளது.
ஒரு நாளைக்கு தினமும் குறைந்தப்பட்சமாக 8 மணி நேரம் தூங்க வேண்டும். முறையான தூக்கத்தின் போது வளர்ச்சி ஹார்மோன்கள் வெளிபடும்.
குழந்தைகள் சரியாக தூங்காவிட்டால் அவர்களின் வளர்ச்சியும் குறைவாகவே இருக்கும்.
சீரான உணவு (பேலன்ஸ்டு டய்ட்) மிகவும் அவசியமானது. குறிப்பாக போதியளவு புரதச்சத்து எடுத்தால் தான் தசைகள், எலும்புகள் நன்றாக வளர்ச்சியடையும்; குழந்தைகளும் உயரம் அதிகரிப்பர்.
இந்த மூன்றிலும் கவனம் செலுத்தினாலே குழந்தைகளின் உயரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.