தலையில் அரிப்பு, புண் உண்டாவதை தவிர்க்க

தலையில் அரிப்பு ஏற்படுவதற்கு பொடுகு பிரச்னை காரணமாக இருக்கலாம். இது டீனேஜ் பருவத்தினரை அதிகளவில் பாதிக்கும்.

இதனை தவிர்க்க வாரத்துக்கு 3, 4 நாட்கள் தலைக்கு நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும்.

தலைக்கு ஷாம்பூ பயன்படுத்த வேண்டும். தலையில் அதிகம் எண்ணெய் வைப்பதை குறைக்க வேண்டும்.

அதேவேளையில், தோல் உரிந்து வருகிறது என்றால் அது சீபோ சொரியாஸிஸ் ஆக இருக்கலாம்.

இது உடலில் எதிர்ப்புச்சக்தி குறைவு, மரபணு மூலம் ஏற்படலாம்.

கூந்தல் வேர்பகுதியில் அதிக எண்ணெய் படிதல், தலையை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட காரணத்தால் இந்த சொரியாஸிஸ் ஏற்படுகிறது.

டாக்டரிடம் கலந்தாலோசித்து லோஷன், மாத்திரகளை எடுத்தால், இந்த வகை சொரியாஸிஸ் நோயை கட்டுப்படுத்தலாம்.