உங்க டயட்டில் பூசணி விதைகளை சேர்ப்பதற்கான 7 காரணங்கள் இதோ !

பூசணி விதைகளில் பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்பு, கால்சியம், காப்பர் மற்றும் ஜிங்க் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

பூசணி விதைகளிலுள்ள மெக்னீசியம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் இவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

இதில் மெக்னீசியம் நிறைந்திருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.

இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், மெக்னீசியம் மற்றும் ஃபேட்டி ஆசிட்டுகள் இதய ஆரோக்கியத்துக்கு நன்மை விளைவிக்கக்கூடியது. ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.

பசி உணர்வை குறைத்து வயிறு நிரம்பிய உணர்வை அளிப்பதால், உடல் எடை குறைப்பு பயணத்துக்கு வெகுவாக உதவுகிறது. மேலும் செரிமான கோளாறுகளையும் சரி செய்கிறது.

மெக்னீசியத்திலுள்ள டிரைடோபன் என்னும் வேதிப்பொருள் நல்ல தூக்கத்தை வரவழைக்கிறது. பூசணிக்காய் விதைகளில் மெக்னீசியம் உள்ளதால் அது தூக்கமின்மையிலிருந்து காக்கிறது.

பூசணி விதைகளிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் ஏ, நமது செல்களிலுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய வேதிப்பொருட்களை நீக்கி நோய் நமக்கு எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

இதிலுள்ள அமினோ ஆசிட் பண்புகள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

எனவே, பூசணி விதைகளை அப்படியோவோ, நொறுக்கு தீனியாகவோ, சாலட்டில் சேர்த்தோ அல்லது ஓட்ஸ், தயிர் போன்றவற்றின் மேலே தூவியோ சாப்பிடலாம்.