சைவப்பிரியர்களுக்கு புரதச்சத்து கிடைக்க இதோ சில உணவுகள் !
சைவப்பிரியர்கள் தினமும் சில புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமாக புரதச் சத்து பற்றாக்குறையில் இருந்து எளிதாக எஸ்கேப் ஆகலாம்.
பச்சைப் பட்டாணியை உணவில் சேர்ப்பதால் புரதம் அதிகளவில் கிடைக்கும். இதனுடன் சோயா பால் சாப்பிட தசைகள் வலுவாகும்.
தோஃபு பன்னீர், டிம்பா, எடமே ஆகியவை சோயா பீன்களில் இருந்து எடுக்கப்படுவதால், இவற்றில் ஏதாவதொன்றை தினமும் முயற்சிக்கலாம்.
உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அதிகளவு புரதம் கிடைக்க பாலில் ஓட்ஸை கலந்து சாப்பிடலாம்.
முளைகட்டிய பயிர், சிறுதானியங்கள், கோதுமைக்களி ஆகியவற்றை அவ்வப்போது எடுக்கலாம்.
பருப்பு வகைகள், கீரை, காய்கறிகள், பழங்களைச் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.
கோதுமையில் உள்ள குளூடெனில் அதிகளவில் புரதம் உள்ளது.