இளசுகளின் தீராக்கனவான லடாக் பயணத்துக்கு இதோ சில டிரிக்ஸ் !
லடாக் பைக் பயணங்களுக்கு மே முதல் அக்டோபர் வரை சிறந்த நேரமாகும்.
உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமானது. எனவே, தினமும் 3 முதல் 4 லி., தண்ணீர் குடிக்க வேண்டும்.
லேயை அடைந்த பிறகு, உங்களின் இன்னர் லைன் பெர்மிட்கள் (ILP) ஒழுங்காக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு, லேவில் உள்ள DC அலுவலத்தில் அனுமதி பெற வேண்டும்.
அவசரப்படாமல் அவ்வப்போது, இடையில் பைக்கை நிறுத்தி, அந்த இடத்தின் அழகை ரசித்து, மனதை ரிலாக்ஸ் செய்யலாம்.
பயணத்தின் போது புகைபிடிப்பது, மது அருந்துவதை தவிர்க்கவும்.
ஏ.டி.எம்., கார்டுகளை மட்டும் நம்பாமல் கையில் குறிப்பிட்டளவு பணத்தையும் வைத்திருப்பது சிறந்தது
சிறிதளவாவது பெட்ரோல், கூடுதல் பஞ்சர் கிட், ஆக்ஸிலேட்டர் கேபிள்கள், கிளட்ச் கேபிள்கள், டியூப்கள், ஃபியூஸ்கள் மற்றும் ஏர் பம்ப் ஆகியவற்றை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
டிரக் டிரைவர்கள் உட்பட அனைவரிடமும் முடிந்தளவு சுமூகமாக நட்புறவு வைத்துக் கொள்ளுங்கள். எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடந்தால் உதவிக்கு அழைக்க டிரக்குகளே சிறந்த வழியாகும்.