வறட்சியில் தென்னை மரங்களை பாதுகாக்க இதோ சில டிப்ஸ்

தமிழகத்தில் ஆங்காங்கே மழை பொழிவு இல்லாத நிலையில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கடந்த சில நாட்களாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வறட்சி தலைதுாக்க துவங்கியுள்ளதால், விவசாயம் கடுமையாக பாதிக்கிறது.

எனவே, வறட்சி காலத்தில் தென்னைக்கு இயற்கை மூடாக்கு அமைக்க வேண்டும்.

ரசாயன உரங்கள் இடுவதை முற்றிலும் தவிர்த்து, அதற்கு மாற்றாக மண்புழு உரம், குப்பை மண் உள்ளிட்டவைகளை இடலாம்.

இதனால், மண்ணில் நீரை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

தென்னைக்கு, அதிகாலை அல்லது இரவு நேரத்தில் தண்ணீர் விட வேண்டும். இதற்கு இடப்பட்ட நேரத்தில் தண்ணீர் பாய்ச்சுதலை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் வறட்சி காலத்திலும் தென்னையை பாதுகாக்கலாம் என்பது, வேளாண் பல்கலை பேராசிரியர்களின் அட்வைஸாகும்.