ஆண் முதலை துணையின்றி முட்டையிட்ட முதலை : அமெரிக்க விஞ்ஞானிகள் வியப்பு

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவில் 2018ல் 16 ஆண்டுகளாக தனியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க பெண் முதலை ஒன்று, ஒரு முட்டையை இட்டது.

அதில் உள்ள கருவை ஆய்வு செய்ததில், பெண் முதலையை போன்று 99.9 சதவீதம் இருந்துள்ளது.

இது முதலை இனத்தில், அரிய இனப்பெருக்க உத்தியை முதல்முறையாக ஆவணப்படுத்தி உள்ளது.

மரபணுவை ஆராய்ந்ததில், தனது ஆண் முதலையுடன் இணை சேராமல், முட்டை இட்டிருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.

இதனை 'கன்னி பிறப்பு' (Virgin Birth) என குறிப்பிட்டுள்ளனர்.

இது பல கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த டைனோசர்களின் இனப்பெருக்க உத்தி என கூறப்படுகிறது.