முகத்தில் கரும்புள்ளிகள் மறைய என்ன செய்யலாம்?

முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில், ஒரு மேஜைக்கரண்டி பட்டை பொடியுடன், தேனை கலந்து கூழாக்கி, இரவில் பூசி, காலையில் மிதமான சூடுள்ள நீரில் கழுவ வேண்டும்.

காய்ந்த ஆரஞ்சு தோலை பவுடர் செய்து அதில் சிறிதளவு தண்ணீர் அல்லது பால் ஊற்றி பேஸ்ட் போல் ஒரு மாஸ்க் தயாரித்து அதை முகத்தில் பூசி வர விரைவில் கரும்புள்ளி போய்விடும்.

இரவில் படுக்கப் போகும் முன் இரண்டு தேக்கரண்டி கறிவேப்பிலை சாற்றில் அரை தேக்கரண்டி மஞ்சள் பொடியைக் கலந்து கரும்புள்ளிகள் மற்றும் வடுக்களின் மீது தடவி வர குணம் காணலாம்.

பாலுடன், அரிசி சேர்த்து ஐந்து மணிநேரம் ஊற வைத்து, அதனை நன்றாக அரைத்து அதன் பேஸ்ட்டை முகத்தில் பயன்படுத்தலாம்.

கிரீன் டீ இலையை நீரில் கலந்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் வைத்து, மென்மையாக, 'ஸ்கரப்' செய்து கழுவ வேண்டும்.

ஓட்ஸ் பொடி ஒரு மேஜைக் கரண்டி, சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து கூழாக்கி, முகத்தில் 'ஸ்கரப்' செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.

இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.