புகைக்கும் எண்ணத்தை தவிர்ப்பது எப்படி?
பீடி, சிகரெட் புகைப்பதால் நுரையீரல் பாதிக்கும் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.
புகைப்பதை நிறுத்திய பின் சி.டி.,ஸ்கேன் அல்லது எக்ஸ் ரே மூலம் எவ்வளவு சதவீதம் நுரையீரல் பாதிப்பு உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஆறு மாதத்திற்கு பிறகு மீண்டும் சி.டி.,ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்து பாருங்கள். அப்போது, நுரையீரல் பாதிப்பிலிருந்து குணமடைந்தது தெரியும்.
புகை பழக்கத்தால் நுரையீரல் பாதித்து இருமல் தொடர்ந்து வரும்.
தினமும் துாங்கி எழுந்ததும் உடனே புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், முழுமையாக புகைப்பிடிப்பதை நிறுத்துவது சிரமம்.
ஆனால், துாங்கி எழுந்து 2, 3 மணிநேரத்திற்கு பிறகு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர் என்றால், உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த இயலும்.
புகைக்கும் பழக்கத்தை நிறுத்தியவர்கள், மீண்டும் புகைக்க தோன்றினால் டாக்டர்கள் பரிந்துரையில் நிக்கோட்டின் கம்ஸ் சில நாட்கள் பயன்படுத்தி பின் முழுமையாக புகைப்பதை தவிர்க்கலாம்.