தலையில் பொடுகு, கூந்தல் உதிர்வதை எப்படி சரி செய்வது?
கூந்தல் உதிர்வதை தடுக்க மருந்து மட்டுமன்றி, பராமரிப்பும் மிகவும் அவசியம்.
வாரம் இருமுறை எண்ணெய் வைத்து தலைக்கு மசாஜ் செய்து குளிக்க வேண்டும்.
கூந்தலின் தன்மைக்கேற்ப எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.
தேங்காய், ஆலிவ், எள்ளு, அருகம்புல் எண்ணெய் இவற்றில் ஏதாவதொரு எண்ணெயை தினமும் தேய்த்து கொள்ளலாம்.
முடிந்தளவு ஷாம்பு தவிர்த்து, சீயக்காய் பொடியை பயன்படுத்தலாம்.
உணவில் பீட்ரூட், வெந்தயம், மாதுளை, பேரீச்சை, அத்தி, கருவேப்பிலை, கீரை வகைகளை சேர்க்க வேண்டும்.
சித்த மருத்துவர்களின் ஆலோசனையுடன் கருஞ்சீரக தைலம், நீலிபிருங்காதி தைலம், பயன்படுத்தினால் பொடுகு, கூந்தல் உதிர்வதை தடுக்கலாம்.