கீமோதெரபி சிகிச்சையின்போது சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி?
புற்றுநோய் சிகிச்சையில் கீமோதெரபி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இச்சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் சிறுநீரகங்களை பாதிக்க செய்யலாம்.
உட்கொள்ளும் மருந்துகளை உடலிலிருந்து வடிகட்டி வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்கள் செய்வதால், கீமோதெரபி சிகிச்சையின் போது அவற்றை பாதுகாப்பது அவசியமாகும்.
எனவே, மருத்துவரிடமிருந்து பிரத்யேக அறிவுரை வரும்வரை, போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
சிகிச்சை காலத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது காய்ச்சல் ஏற்பட்டால், உடலில் நீர்ச்சத்து குறைவதை தடுக்க கூடுதல் திரவங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரக பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய ரத்த பரிசோதனைகள் மிக முக்கியமாகும். ஒவ்வொரு கீமோதெரபி சுழற்சிக்கு முன்பும் முக்கிய பரிசோதனைகளை தவறாமல் செய்ய வேண்டும்.
நீங்கள் பிற பிரச்னைகளுக்கு எடுக்கக்கூடிய மருந்துகள் மற்றும் சத்து மாத்திரைகள் பற்றி, புற்றுநோய் மருத்துவரிடம் சொல்லி ஆலோசிக்க வேண்டும்.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்துக்கு பரிந்துரைத்த மருந்துகளை உட்கொண்டு, அவற்றை கட்டுக்குள் வைக்க வேண்டும். இல்லாவிட்டால், கீமோதெரபியின் போது சிறுநீரக பாதிப்பு அதிகரிக்கும்.
கடுமையான வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடலில் நீர்ச்சத்து வேகமாக குறைந்து, கீமோதெரபி சிகிச்சையின்போது பாதிப்புக்கு வழிவகுக்கும்.
சில கீமோதெரபி மருந்துகளுக்கு சிகிச்சைக்கு முன்னும் பின்னும் ஐ.வி., ப்ளூயட்ஸ் ஏற்ற வேண்டியிருக்கலாம். எனவே மருத்துவரின் அறிவுரைப்படி செயல்பட வேண்டும்.