தவறான சிபில் பதிவுகளை சரி செய்வது எப்படி?
ஒருசிலர் மகன், மகளின் கல்வி கடன் மற்றும் வேறு ஏதாவது ஒரு கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, சிபில் ஸ்கோர் சரியில்லை என காட்டக்கூடும்.
வங்கியில் வழங்கப்படும் சிபில் அறிக்கையில் பிறந்த தேதி, தந்தை பெயர், குடும்ப அட்டை எண், ஓட்டுநர் உரிமம், வீட்டு முகவரி போன்றவை வேறுபட்டு இருக்கலாம்.
ஒரு சில நேரங்களில் ஏற்கனவே கடன் பெற்றுள்ளதாக அறிக்கையில் கூறி, கடன் நிலுவையில் உள்ளதால் கடன் வழங்க இயலாதென, வங்கியில் தெரிவிப்பர்.
இதுபோன்ற சூழலில் சிபில் வலைத்தளத்துக்கு (https://www.cibil.com/) போய் பதிவு செய்து உள்ளே நுழைய வேண்டும்.
அங்கே உங்கள் 'பான்' எண்ணை கொடுத்தாலே, உங்கள் விபரங்கள் அனைத்தும் பட்டியல் இடப்படும்.
ஏற்கனவே நீங்கள் கையில் வைத்துள்ள அறிக்கையையும், அங்கே பட்டியல் இடப்பட்டுள்ள விபரங்களும் ஒன்றாக இருக்கின்றனவா என்று பார்க்கவும்.
உங்களை பற்றி எல்லா விபரங்களும் தவறாகத்தான் இருக்கின்றன என்றால், அங்கே ஒவ்வொரு பகுதியாக போய், உங்கள் ஆட்சேபனையை பதிவு செய்யவும்.
குறிப்பாக 'கடனை நான் வாங்கவே இல்லை' என தெளிவாக குறிப்பிட வேண்டும்.
அதேவேளையில், குறிப்பிட்ட கடனை உங்கள் பெயரில் பதிவு செய்த, வங்கி அல்லது நிதி நிறுவனத்துக்கு, எழுத்துப்பூர்வமாக புகார் தந்து, தவறான பதிவுகளை நீக்கும்படி கோரவும்.
பொதுவாக இதுபோன்ற புகார்கள் 30 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட வேண்டும். இதை சொல்வது மிகவும் ஈஸி.
ஆனால், நடைமுறையில் வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் இருந்து விளக்கம் வாங்க வேண்டியிருப்பதால், ஒருசில மாதங்கள் கூட ஆகலாம்.
தவறான விவரங்களை நீக்குவதற்கு தேவையான ஆவணங்களை கொடுத்து பொறுமையாக தான் சீராக்க வேண்டும்.