கடலிலுள்ள உப்பின் உயரம் எவ்வளவு?
பூமியின் பெரும்பகுதி நீர், கடலில் உப்பு நீராகத்தான் உள்ளது.
பாறைகள், மணலை கரைத்துக் கொண்டு மழைநீர் ஆறுகளில் சேர்கிறது.
அப்போது பாறை, மணலிலுள்ள தாது, உப்பு கடலில் சேர்க்கப்படுகிறது.
கடலில் சேரும் நீர் வெப்பத்தால் ஆவியாகிறது. ஆனால் உப்பு தங்கிவிடுகிறது.
ஆவி, மேகமாகக் குளிர்ந்து மழையாகப் பொழிகிறது. அந்த சுழற்சி (மழை நீர் தாது, உப்புகளை ஆறு வழியாக கடலுக்கு) தொடர்கிறது.
இதுவே கடல் நீர் உப்புக்கு காரணம்.
ஒருவேளை கடல்நீர் முழுவதும் ஆவியாகி விட்டால், உப்பு படிந்திருக்கும் தடிமன் 500 அடி உயரம் இருக்கும். இது 40 மாடி கட்டடத்துக்கு சமம்.