சுற்றுலா போகிறீர்களா? உங்கள் போக்குவரத்தை திட்டமிட டிப்ஸ்…
பஸ், ரயில், விமானம் மற்றும் கார் என, எந்த வகை போக்குவரத்தை தேர்வு செய்கிறீர்கள் என்பதை, முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள்.
செலவை குறைக்க, அரசு பேருந்துகளை தேர்வு செய்யலாம். நமக்கான இருக்கைகளை நாமே தேர்வு செய்யும் வசதி கூட இப்போது இருக்கிறது.
ரயில் பயணம் எனில், மூன்று மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், தாமதம் இல்லாமல் முன்பதிவு செய்வது நல்லது.
கடைசி நேரத்தில், 'தட்கல் டிக்கெட் புக்' செய்யலாம் என நினைத்தால், டிக்கெட் கிடைக்காத சூழலில் மொத்த பிளானும் சொதப்பி விடும்.
விமானத்தில், பயணம் செய்வதற்கு, 60 நாட்களுக்கு முன், டிக்கெட் முன்பதிவு செய்தால், கட்டணம் குறைவு. சில நேரங்களில் சில இருக்கைகளுக்கு சலுகை கொடுப்பர்.
சில இணைய தளங்களில் டிக்கெட் விலையை மட்டும் குறிப்பிட்டிருப்பர். குறிப்பு பகுதியில் சிறிய எழுத்து வடிவில், ஜி.எஸ்.டி., மற்றும் வரி பற்றி குறிப்பிட்டு இருப்பர்.
அதை கவனிக்காமல் கட்டணம் குறைவாக இருக்கிறதே என, டிக்கெட்டை முன்பதிவு செய்தால் திட்டமிட்டதை விட, அதிக பணத்தை செலவு செய்ய வேண்டிய சூழல் வரலாம்.