எச்.எம்.பி.வி., தொற்று எப்படி பரவும்?
தமிழகம், கர்நாடகா மற்றும் குஜராத்தில் இதுவரை ஐந்து குழந்தைகளுக்கு, எச்.எம்.பி.வி., தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில், எச்.எம்.பி.வி., எனப்படும், ஹியூமன் மெட்டாநிமோ வைரஸ் பரவல் சமீபத்தில் அதிகரித்தது.
இது புதிய வைரஸ் அல்ல. கடந்த 2001-ம் ஆண்டிலேயே இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இது 'பாராமிக்சோவிரிடே' குடும்பத்தைச் சேர்ந்தது.
நுரையீரலை தாக்கி சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் இந்த வகை தொற்று, குழந்தைகள் மற்றும் முதியோரை எளிதில் தாக்குகிறது.
இருமல் அல்லது தும்மலில் இருந்து வெளிப்படும் நீர்த்துளிகள் மூலமாகவும், அசுத்தமான பரப்புகளைத் தொடுவதாலும், பாதிக்கப்பட்ட நபர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலமாகவும் பரவும்
குளிர்காலத்தின் பிற்பகுதியிலும், வசந்த காலத்தின் தொடக்கத்திலும் உச்சமாக இருக்கும், சில பகுதிகளில் இது ஆண்டு முழுவதும் பரவக்கூடும் என கூறப்படுகிறது.
ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை மூலமும், ஆன்டிஜென் கண்டறிதல் மதிப்பீடுகள் மூலமும் தொற்று பாதிப்பை கண்டறிய முடியும்.
சளி பாதிப்பு ஏற்பட்டால், மாஸ்க் அணிய வேண்டும், கைகளை கழுவ வேண்டும், கூட்டத்தை தவிர்க்க வேண்டும், கடும் பாதிப்பு இருந்தால், டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
தும்மும்போது அல்லது இருமும்போது வாய் மற்றும் மூக்கை மூடுவது மூலம் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தலாம்.